Tuesday 16 March 2010

ஈழத்துச் சிவாலயங்கள்: நகுலேஸ்வரம்

நகுலேஸ்வரம் ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்களில் ஒன்று.

ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்

இவ்வாலயம் யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் அமைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேதாரகொளரி விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாக்கப் பட்டன. 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டி மகாசிவராத்திரி அன்று நாலாயிரத்திற்குமதிகமான பக்கதர்கள் கலந்து கொண்டனர். இங்கு மக்கள் இன்னமும் மீள்குடியேறவில்லை இது அதியுயர் பாதுகாப்பு வலயம் என்று அரசானது கூறிவருகின்றது.

நகுலேஸ்வரம் 2010

கீரிமலை நகுலேஸ்வர ஆலய மஹா சிவராத்திரி உற்சவம் 13.03.2010


வரலாற்றுப் பின்னணி


சோழ இளவரசியாகிய மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து அவஸ்தைப் பட்டாள். சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்ட மாருதப்புரவீகவல்லி கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்ததின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டாள். கீரிமலைப் புனித்தத் தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயுந்தீர்ந்து குதிரைமுகமும் மாறியது.


போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட ஆலயம்


போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1561 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசியர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது.

திருத்தி அமைக்கப்பட்ட நகுலேஸ்வரம் ஆலயம்

திருப்பணிவேலைகள் நிறைவேறி 1895ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனிமாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

Naguleswaram Temple, Jaffna part 1 2009

2 comments:

  1. மிக நல்ல பதிவு இராணுவம் பொலிஸ் இவர்களை தவிர்த்து இருக்கலாம் இனிவரும் பதிவுகளில் இதை கவனியுங்கள் நன்றி

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு இராணுவம் பொலிஸ் இவர்களை தவிர்த்து இருக்கலாம் இனிவரும் பதிவுகளில் இதை கவனியுங்கள் நன்றி

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.