Sunday, 30 May 2010

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்

மீள்பதிவு

அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!

விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.

கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.

இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!

அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:

"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)

இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)

செர்‎ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!


(நன்றி : ஞான ஆலயம் ஜூலை 2009)

131 சித்தர்கள் போற்றித்தொகுப்பு

அகத்தியர் துணை

ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி

துவக்கப்பாடல்


திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.


ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல், பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் தொகுத்து வழங்கிய
சித்தர்கள் போற்றித்தொகுப்பு

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

காணொளி: ஓங்காரக்குடிலும் சதுரகிரியும்

தமிழ் வளர்க்கும் ஓங்காரக்குடிலும் சித்தர்கள் வாழும் சதுரகிரியும்
ஆக்கம்: கண்ணன்(சூர்யா)

ஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி!
ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் ஓங்காரக் குடிலாசன் திருவடிகள் போற்றி! போற்றி!


சதுரகிரி உலக அதிசயங்களே அதிசயக்கக்கூடிய அதிசயம். எங்கு திரும்பினாலும் அதிசயம். இங்குள்ள மரங்கள், வாழும் உயிரினங்கள், மூலிகைச்செடிகள் யாவும் அதிசயம். சித்தர்களின் ஆசியில்லாமல் இலகுவாகப் போக முடியாது என இங்குள்ள மலைவாசிகள் கூறுகிறார்கள்.

நான்கு பக்கமும் நன்னான்காக 16 மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள் வாழும் புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல். இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

தமிழ் மண்ணிலுள்ள இந்த அதிசயத்தை, மகிமையை தமிழர்கள் பலரும் அறியாமலுள்ளனர். இமையத்துக்கு இணையானதென்று சித்தர்கள் கூறியுள்ளார்கள். நிறையச் சிரமங்கள் மத்தியில் நானும் போய் வந்தேன். என்ன சிரமம் இருந்தாலும் மிகுந்த திருப்தி தரும் பயணம்.

தமிழ் தந்து, தமிழ் இன்றும் வளர்த்துக் கொண்டிருக்கும் முற்றுப்பெற்ற தமிழ்ச்சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள். திருச்சி துறையூர் ஓங்காரக்குடிலுக்கும், சதுரகிரிக்கும் தமிழ்மீதும், தமிழர் வரலாறு மீதும் ஆர்வமுள்ள அன்பர்கள் அனைவரும் செல்வது பலனளிக்கும். ஆன்மீகவாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓங்காரக்குடிலில் அய்யன் திருவள்ளுவரின் பல நூல்கள் பற்றியறியலாம்.

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)பகுதி 1 : 7சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம்.
பகுதி 2 : 7


சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார்.

மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ,அவ்வளவு ஏன், ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது.

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர் சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கென அவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும் இயலாத ஒன்றாகவே உள்ளது.

மனித நேயம் அறிந்த மனிதனே மகான்/சித்தன் ஆகிறான்.பின்னாளில் சிவம்/தெய்வமும் ஆகின்றான்.

பகுதி 3 : 7


வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர், காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே.

பகுதி 4 : 7


வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும். சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு.

பகுதி 5 : 7தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க சுவாமிகள். மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா." என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும். பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன. நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன.

பகுதி 6 : 7


சன் ரீவி நிஐம் நிகழ்ச்சி பின்னிசை வழங்கி பயமூட்டும் அளவிற்கு பயப்பட ஒன்றுமில்லை.அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்.

பகுதி 7 : 7


ஓங்காரக்குடில்

தமிழையறிய, தமிழ்தந்த தலைவனையறிய ஓங்காரக்குடில் விரைவீர்.
ஆக்கம்: கண்ணன்(சூர்யா)

ஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி!
ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் ஓங்காரக் குடிலாசன் திருவடிகள் போற்றி! போற்றி!சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!

சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
சித்தர் தமிழே ஓங்கார விளக்கம் தரும்
சித்தர் தமிழே பிரணவ சூட்சுமம் விளக்கும்

தமிழே தலைவன் மொழி; சித்தன் மொழி
தமிழை அறிந்தால் சித்தனை அறியலாம்
தமிழை அறிந்தால் தலைவனை அறியலாம்
தமிழை அறிந்தால் உலகை அறியலாம்
தமிழை அறிந்தால் இயற்கையை அறியலாம்

தமிழை அறிந்தால் உன்னை அறியலாம்
தமிழை அறிந்தால் நீ சவமல்ல; நீயே சிவமென்பதை அறியலாம்

அறிவீர் இதனை இன்றே! செல்வீர் ஓங்காரக்குடில் நன்றே!


ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அறிய @
சித்தர்கள் தந்த தமிழ்
http://cyber-mvk.blogspot.com/2010/04/blog-post_15.html

Saturday, 29 May 2010

சித்தர் மருத்துவம் - 1

புளிச்சிறு கீரை

“தேக சித்தியாருஞ்சிறு காசம் மந்தமுறும்
யோகமுறும் விந்துவிநற்புஷ்டியுண்டாம் - வாகாம்
வெளிச்சிறுமான் நோக்கு விழிமென் கொடியே நாளும்
புளிச்சிறு கீரையிணும் போது”


புளிச்சிறு கீரையை காச்ச கீரையென்றும் கூறுவர். இக்கீரையால் சிறு இருமலும் மந்தமும் நீங்கும். காய சித்தியும் புணர்ச்சியில் விருப்பமும் உண்டாகும்.

இரத்த பித்த ரோகம், கரப்பான் வீக்கம், எலும்புச் சுரம் ஆகியன நீங்கும்.


காட்டுக் கடுகு

"வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதமிகு பிநிசம் ஓடுங்காண் - போதெறிந்து
காய் வேளைக் காயும் விழிக் காரிகையே!
நாய் வேளையுண்ண நவில் வையமிதில்"


காட்டுக் கடுகின் இலையை வெந்நீர் விட்டுக் கசக்கிப் பிழிந்த சாற்றில்
இரண்டொரு துளி காதில்விட காது நோய் குணமாகும்.

வாதம், உடல் கடுப்பு, வன்சூலை, பீநிசம் ஆகிய நோயெல்லாம் இம்மூலிகையால் குணமாகும்.

Wednesday, 26 May 2010

இராவணன் வணங்கிய தலம்

ஈழத்தமிழரின் தொன்மை வரலாற்று எச்சங்கள்

பழம் பெருமை மிக்க திருக்கோணேசுவரம்

திருக்கோணேசுவரம்

லேனா தமிழ்வாணன்

காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள் - மேலும் அறிய இங்கே அழுத்தவும்


பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். ʮ‡க்குன்று அமைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவைபற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘The Temporal and Spiritual conquest of Celyon’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.

கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான், தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும் இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.
மகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு. 1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச, புராண வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.

கி.பி. 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு மீன் இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டியமன்னன் ஆட்சிக்காலத்தில், மனுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப்பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையில் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டென்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளிய பாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றி
குரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே’’
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். ‘விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை’ எனத் தொடங்கும் பாடலில்,

‘‘நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கோணமலை தலத்தாருகோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் வருவோனே!’’
எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில் திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்,

‘‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,
‘‘…தெக்கார மாகோணத்தானே....’’ என்றும்,
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,

‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்
மன்னு திருகோணமலைமகிழ்ந்து....’’

என்ற வரிகளும் காணப்படுகின்றன.

சுந்தரர் அருளிய ஊர்த்தொகையில்,

‘‘நிறைக்காட்டானே நெஞ்சத்தானே....’’

என்று தொடங்கும் பாடலில்,

‘‘…திருமாந்துறையாய் மா கோணத்தானே....’’

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு. 543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத்திசையில் உள்ள தம்பலகாமம் கோணேசகோயிலைப் புதுப்பித்துக் காட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவமாலை’ கூறியுள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது கோணேசகோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகுமன்னன் கோணைநாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

போர்த்துக்கேயர் கி.பி. 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன் இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப்பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பாண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையிலும் திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவவழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.

அந்நியராகிய போர்த்துக்கேயரால் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில், ஸ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும் தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.

இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுரவடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல்மட்டத்துக்குக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகின்றது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால் இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்கோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற் காலத்திலும் நடைபெறுகின்றது.

மாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால் இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐந்து கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சியிலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயத்தைச் சுற்றிவந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத் தாண்டி தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம்வந்து, வடதிசைக் கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில் மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே போர்த்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.

மாதுமையம்பாள் ஆலயத்துக்கும் பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச் செல்லும் பொழுது மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச் சிறியது. இச்சமதரையின் கிழக்கு செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கர்பக்கிருகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் குடியிருப்பு கிளிவ் கொட்டெஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடி உயரமான ஸ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத்தொடரின் அந்தத்தில். 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள் தமது ஆராய்ச்சியின்போது வேறோரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில் கோகர்ணவிகாரை வேறோர் இடத்தில் இருந்தமை பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்ட போது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் ‘திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்புகளிற் காணலாம். வரலாறு, இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள் யாவும் கிமுற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையில் இந்துக்கோயில் இருந்ததென்பதை நிரூபிக்கும்பொழுது மகாயான தீவிரவாதியான மகாசேனன் இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக் கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பது தவறான சிந்தனையாகும்.

மூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கம் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன்வெட்டை அடையும்போது குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம் தூரக் கடலிற் செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால் தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால் ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன் வெட்டிற்கு அண்மையில் உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சண கயிலாய புராணம், இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப் புத்தகமெனப் போற்றுவர்.

கோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புகள் யாவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறான சரித்திரப் பெருமையும் நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அந்நியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தழித்தனர். இலங்கையை போர்த்துகேயர் கி.பி. 1905ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம் கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்கையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும் திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.

கி.பி. 1624 – 1627 வரை போர்த்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவன் கோணேசர் மலையிலிருந்த கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போர்த்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.

பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.

(மு) ன னெ கு ள
கா ட ட ன மூ ட டு
(தி) ரு ப ப ணி யை
ன னெ ப ற ங் கி
(க ) க வெ ம ன னா
ன பொ ண னா
(ச ) ன யி ய ற (று )
(செ ) த வை த
(ண ) ணா
க ள

இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.

இதனை,

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்
மானே வடுகாய் வரும்.’’

எனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிராமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.

திருகோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியர் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்த அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்
பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னர சர்கள்.’’

இக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில் குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.

கண்ணகி வழக்குரையில்,

‘‘….மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்
மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து
மஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’
என்றும்,

யாழ்ப்பாண வைபவ மாலையில்,

‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.

போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி வணங்கிச் சென்றுள்ளனர்.

கி.பி. 1639இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.

கி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக் கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டு கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வளையமாகக் காணப்பட்டதால் வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், தாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைத்து அவற்றைக் காப்பாற்றினர்.

கி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆந் திகதி யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கோணேஸ்வரம் இழந்த பெருமையை மீளப் பெற வித்திடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார்கள். சிதாகாசவெளியைத் தமது உள்ளத்திருத்திப் பிரார்த்தனை செய்த மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டன. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு. சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினார். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு. மு. கோணாமலை செல்வராசா அவர்கள்.

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆந் தேதி ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சாரப் அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. ‘‘சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபிஷேகத்தினால் தெய்வீகத்தன்மை பெறுகின்றது’’ என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது?

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆந் திகதி, திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காணப்படுகின்றது. கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும், தேர்த் திருவிழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டை, அதியுயர் பாதுகாப்புவளையமாகக் காணப்படுவதால் ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும், மக்கள் கோணேசப் பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.

திருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டு, ஈழம், இந்தியா, மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரம்மாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும், பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.

இதன் தொன்மையை அறிய எண்ணி, 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சி செய்த ஆர்தர் சி. கிளார்க், மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக்குறிப்புகளையும், புகைப்படப்பிரதிகளையும் ஆய்வு செய்தோர், மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலின் அடியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரம்மாண்டமான மணிகளும், விளக்குகளும், தூண்களும், கோயிற் தளங்களும் கடலினடியில் இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றையும், திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் மறைக்கவும், மாற்றவும் முயலும் சக்திகளால், கடலினடியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டால், நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழமண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.

தினமும் விழாக்கோலம் பூண்டு, சுதந்திரமாக மக்கள் சென்று வணங்கிய திருக்கோணேஸ்வரத்தின் இன்றைய நிலை என்ன? பாதுகாப்புப் பிரதேசமாகவுள்ள பிரடெரிக் கோட்டையுள் எழுந்தருளியிருக்கும் கோணேசப் பெருமானின் இன்றைய நிலை கல்மனங் கொண்டோரையும் கலங்கச் செய்யும். மலையடிவாரத்திலிருந்து மேலே ஏறிச்செல்லும்பொழுது, வீசுகின்ற காற்றிலே மலர் மணமும், மூலிகைகளின் வாசமும் சேர்ந்து புத்துணர்வைக் கொடுக்கும். இலந்தை, பாலை, நாவல் எனப் பல்வகைப் பழங்கள் எங்கும் விழுந்து பரவிக் காணப்படும். இம்மரங்கள் தறிக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மானும், மயிலும், மந்தியும் அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரியும். இவையெல்லாம் எங்கே ஓடிச்சென்றனவோ தெரியவில்லை. மலை உச்சியிலே சில மந்திகள் காணப்படுகின்றன.

இறைவனைத் தரிசிக்க அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே கோட்டைக்குள்ளே செல்ல முடியும். மலையடிவாரத்தின் கடற்கரைப்பகுதி அன்று வெண்மணற்பரப்பாகக் காணப்பட்டது. இன்று அப்பகுதி முள்ளடர்ந்த பற்றைபோல மாறியிருக்கின்றது. மலையடிவாரத்திலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவற்றைக் கொடுத்து அவர்கள் தரும் பற்றுச் சீட்டுடனேயே கோட்டைக்குள் சென்று, கோணேசப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தில் வெளிநாடுகளிலிருந்து செல்வோரைத் தவிர உள்ளூர் மக்களைக் காண்பது அரிதாகவே காணப்படுகின்றது. தினமும் விழாக்கோலம் பூண்டிருந்த புண்ணியபூமியின் அண்மைக்கால நிலைமை இவ்வாறுதான் காணப்படுகின்றது. இந்நிலை மாறி தொன்மையும், வரலாற்றுப் பெருமையும் மிக்க கோணேசர் ஆலயத்தின் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படுவதோடு இவ்வாலயத்தின் சிறப்புக்களை அனைவரும் அறிந்து போற்றிப் பரவுதல் அவசியமாகும்.


தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.

Tuesday, 25 May 2010

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்


"ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்""வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"
-ஆசான் அருளாளர் வள்ளலார்-

மனித நேய மாண்பாளர் வள்ளலார்

“அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”


உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும் துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!

”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.

“வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!

-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.

வள்ளலார் வெறும் ஆன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”

- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.

சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.

”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!”


- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..

என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி ஆகமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக

”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?”

என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.

சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ஆண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.

எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!

“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” - என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.

“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” - என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ஆன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.


நன்றி:
Vallalar.org

சித்த வைத்தியமும் சித்தர்களும்

சித்த வைத்தியத்தை பலரும் நாட்டு வைத்தியமென்று அதாவது நம்மவர்களின் பாணியில் லோக்கல்(local) சமான் ஒன்று ஒதுக்குகிறோம். அது நாட்டு மருத்துவமல்ல. அது நாடி மருத்துவம். நாடியில் பிடித்து நோய்களையறிந்து குணப்படுத்துவதால் மட்டுமல்ல. நாடி அதாவது தேடி வருபவர்களை மெய்யன்புடன் வரவேற்று பிணி நீக்கியனுப்புதலே சித்த வைத்தியத்தின் அடிப்படைச் சித்தாந்தம். இன்று பல சித்த வைத்தியர்கள் இருந்தாலும் அன்புடன் வரவேற்று பிணி நீக்கும் வைத்தியர்கள் மிகக்குறைவு. பணம் சேர்க்கும் வைத்தியர்களே அதிகம். இவர்களுக்கு இறைநிலையடைந்த, முற்றுப்பெற்ற சித்தர்களின் ஆசிகிடைப்பதில்லை. ஆதலால், இவர்கள் போலிகளே. தமிழ்மொழி தந்து, வளர்த்தவர்கள், வளர்த்துக்கொண்டு இருப்பவர்களும் சித்தர்கள். சித்தர்களுக்குத் தலைவர் ஞானபண்டிதனான முருகப்பெருமானும் அவர் முதற்சீடரான அகத்தீசரும் ஆகும். சித்த வைத்தியமென்றாலே 'பேபர்க்ட் மெடிசின்/Perfect medicine'(ஆங்கிலத்தில் சொன்னாத்தான் பலருக்கும் புரியுது). அதாவது, முற்றுப்பெற்ற ஞானிகளான சித்தபெருமான்களால் உலகத்தோர் நலன் கருதித்தரப்பட்டதே சித்த வைத்தியம். பலருக்கும் முற்றுப்பெற்ற சித்தர், ஞானி, ஆசான் திருவள்ளுவரின் பொதுமறையான திருக்குறள் பற்றித்தெரியும். ஆனால், அவர் வைத்தியத்துறையிலும் வேறு துறைகளிலும் ஆற்றிய பணிகளையும் நூல்களையும் அறிந்திருக்கவில்லை. இனிவரும் ஞானச்சித்தர் காலத்தில்(ஏலவே தொடங்கிவிட்டது) இவைபற்றி மக்கள் அறிய வாய்ப்புக்கிட்டும். அறியவிரும்பும் அன்பர்கள் திருச்சியிலுள்ள துறையூர் ஓங்காரக்குடிலை நாடினால் அறியலாம்.

சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


உதாரணத்திற்கு:-

தலை முடி கறுக்க:

"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"

நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்துஇ எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.


"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".

பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.

சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.


(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூஸ்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூஸ்திரம் - 30
11. வாத சூஸ்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்

தமிழ் எண்கள்* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)


தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.


சித்தர்கள் வகுத்த காலக் கணிப்பு - Lunar metrics of Siddha(Ciththars/Masters)

Thamil & Sanskrit are languages of Ciththars(Siddha/Masters). Both languages were created & developed by Ciththars. It's Ciththars who developed lunar metrics of years.
-தொடரும்-

என் அன்பிற்கினிய உறவுகளே! அடியேனும் தமிழ்த் தேடலின் போது கிடைக்கப்பெறும் தகவலைத் தொடர்ந்து பகிர்கிறேன். என் மொழி என்பதால் சொல்லவில்லை. எங்கள் மொழி 1000/2000/5000 ஆண்டுகள் பழமை வாயந்ததல்ல. கோடி யுகங்கள் பழமை வாய்ந்தது. அதற்குரிய ஆதாரங்களைத் தேடுவதே என் பிறப்பின் பணியாக ஏற்றுத் தேடலில் இறங்கியுள்ளேன். உங்கள் ஆதரவையும் வேண்டி நிற்கிறேன். நன்றி.


ஏதாவது சொற்பிழை, பொருட்குற்றம் இருந்தால் பொருத்தருளுவீர்.

Tuesday, 11 May 2010

திருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் மாபெரும் தமிழ்ச்சித்தர்.

வள்ளுவப் பெருமான் மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் உலகிலுள்ள எந்த மதத்தவராயினும், எந்த மொழியினராயினும், எந்த கலாச்சாரம் உடையவராயினும், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எந்த இனத்தைச்சார்ந்தவராயினும் வள்ளுவப்பெருமான் கடவுள் என்று அறிந்து வள்ளுவப்பெருமானே எனக்கு அருள் செய்யவேண்டுமென்று திருவடி பணிந்து அழைத்தால் அஞ்சேல் மகனே! என்று அருள்செய்யக் கூடிய வல்லமை அய்யன் வள்ளுவருக்குண்டு.


திருக்குறளை பார்த்தால் கடவுளை பார்த்ததாக அர்த்தம். திருக்குறளை தொட்டால் கடவுளின் திருவடிகளை தொட்டதாக அர்த்தம். திருக்குறளை படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம். திருக்குறள் படிப்பதை கேட்டால் கடவுளின் பெருமையை கேட்டதாக அர்த்தம். அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதை பார்ப்பதும், தொடுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும் புண்ணிய செயல்களாகும். தெய்வத்தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் நமது பிள்ளைகளை தமிழை கற்க செய்ய வேண்டும். கற்றால் நமது பிள்ளைகள் கடவுள்தன்மை அடைவார்கள். எனவே, திருக்குறளை போற்றுவோம்! பூஜிப்போம்! வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்!!

வருங்காலத்தில் உலகெங்கும் திருக்குறளை வேதமாக எண்ணிப் போற்றி வணங்கக்கூடிய காலமே ஞானச்சித்தர் காலமாகும். மேலும் ஞானத்தைப்பற்றி அறிந்துகொள்ளவும் இனி பிறவாமையாகிய இரகசியத்தை அறிந்துகொள்ளவும் விரும்புகிறவர்கள் அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.


(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)
திருவள்ளுவர் Thiruvalluvar
Facebook Page

Facebook Group


Monday, 10 May 2010

ஆரியன் யார்? பிராமணன் யார்?

ஆரியன் யார்? பிராமணன்/அந்தணன் யார்?

சாதாரண மானிடர்கள் தங்களை ஆரியர் அல்லது பிராமணர் என்று வகைப்படுத்துவது தவறானது. அதற்கு அவர்கள் அறியாமையே காரணம். அறவழி நின்று முற்றுப்பெற்ற சித்தர்களே(ஞானிகள்) பிராமணர்கள் ஆவார்கள். இவ்வாறு முற்றுப்பெற்ற ஞானிகள்/சித்தர்களே ஆரியர்கள் என்றும் அழைக்கப்படுவர். சாதாரண மனிதர்களை ஆரியர்கள் என்று வகைப்படுத்தல் தவறானது.


கடவுளை அறநெறியில் நின்று இறைவனை அடைந்தவனே அந்தணன்/பிராமணன்/சித்தன் ஆவான். மந்திரங்ளைக் கற்று பூஜை செய்பவர்கள் வெறும் பூசாரியன்றி தம்மைத் தாமே முற்றுப்பெற்ற பிராமணன் அல்லது அந்தணன் என்று அழைப்பது மகாகுற்றமாகும்.

யார் பிராமணன் அல்லது அந்தணன் ஆகலாம்?

பெறுதற்கரிய பிறப்பாகிய மானிடப்பிறப்பைப் பெற்ற அனைவருக்கும் தகுதியுண்டு. 'கு” ஆகிய இருளை நீக்கி “ரு” ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய முற்றுப்பெற்ற 'குரு”வாகிய ஞானிகள்/சித்தர்கள் காட்டும் வழியைக் கடைப்பிடிப்போர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆகலாம்; சித்தன்/ஞானி ஆகலாம்; இறைவனை அடையலாம். பிறப்பால் மனிதர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆக முடியாது.

மானிடனாகப் பிறந்து பிராமணன்/அந்தணன்/சித்தன்/ஞானி ஆனோர் எவரும் உண்டோ?!

ஆம். கோடான கோடிப்பேருண்டு. பல யுகங்களிலும் மானிடராகப் பிறந்து ஞானியாகியுள்ளனர்.

உ+ம்:

ஆசான் அகத்தீசர்
ஆசான் நந்தீசர்
ஆசான் திருவள்ளுவர்
ஆசான் ஒளவையார்
ஆசான் மஸ்தான்
ஆசான் பீர்முகமது
ஆசான் இயேசுபிரான்
ஆசான் கௌதமர்
ஆசான் பூணைக்கண்ணார்
ஆசான் மாணிக்கவாசகர்
ஆசான் வள்ளலார்
.... போன்ற எண்ணிலா கோடிப்பேர்.

Sunday, 9 May 2010

தமிழை அறிவீர்! தமிழ்தந்த தலைவனை அறிவீர்!

தமிழையறிய, தமிழ்தந்த தலைவனையறிய ஓங்காரக்குடில் விரைவீர்.
ஆக்கம்: கண்ணன்(சூர்யா)

ஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி!
ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் ஓங்காரக் குடிலாசன் திருவடிகள் போற்றி! போற்றி!


சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!

சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
சித்தர் தமிழே ஓங்கார விளக்கம் தரும்
சித்தர் தமிழே பிரணவ சூட்சுமம் விளக்கும்

தமிழே தலைவன் மொழி; சித்தன் மொழி
தமிழை அறிந்தால் சித்தனை அறியலாம்
தமிழை அறிந்தால் தலைவனை அறியலாம்
தமிழை அறிந்தால் உலகை அறியலாம்
தமிழை அறிந்தால் இயற்கையை அறியலாம்

தமிழை அறிந்தால் உன்னை அறியலாம்
தமிழை அறிந்தால் நீ சவமல்ல; நீயே சிவமென்பதை அறியலாம்

அறிவீர் இதனை இன்றே! செல்வீர் ஓங்காரக்குடில் நன்றே!


ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அறிய @
சித்தர்கள் தந்த தமிழ்
http://cyber-mvk.blogspot.com/2010/04/blog-post_15.html