Thursday 26 November 2009

திருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் மாபெரும் தமிழ்ச்சித்தர்.

வள்ளுவப் பெருமான் மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் உலகிலுள்ள எந்த மதத்தவராயினும், எந்த மொழியினராயினும், எந்த கலாச்சாரம் உடையவராயினும், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எந்த இனத்தைச்சார்ந்தவராயினும் வள்ளுவப்பெருமான் கடவுள் என்று அறிந்து வள்ளுவப்பெருமானே எனக்கு அருள் செய்யவேண்டுமென்று திருவடி பணிந்து அழைத்தால் அஞ்சேல் மகனே! என்று அருள்செய்யக் கூடிய வல்லமை அய்யன் வள்ளுவருக்குண்டு.


திருக்குறளை பார்த்தால் கடவுளை பார்த்ததாக அர்த்தம். திருக்குறளை தொட்டால் கடவுளின் திருவடிகளை தொட்டதாக அர்த்தம். திருக்குறளை படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம். திருக்குறள் படிப்பதை கேட்டால் கடவுளின் பெருமையை கேட்டதாக அர்த்தம். அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதை பார்ப்பதும், தொடுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும் புண்ணிய செயல்களாகும். தெய்வத்தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் நமது பிள்ளைகளை தமிழை கற்க செய்ய வேண்டும். கற்றால் நமது பிள்ளைகள் கடவுள்தன்மை அடைவார்கள். எனவே, திருக்குறளை போற்றுவோம்! பூஜிப்போம்! வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்!!

வருங்காலத்தில் உலகெங்கும் திருக்குறளை வேதமாக எண்ணிப் போற்றி வணங்கக்கூடிய காலமே ஞானச்சித்தர் காலமாகும். மேலும் ஞானத்தைப்பற்றி அறிந்துகொள்ளவும் இனி பிறவாமையாகிய இரகசியத்தை அறிந்துகொள்ளவும் விரும்புகிறவர்கள் அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.


(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!

சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
சித்தர் தமிழே ஓங்கார விளக்கம் தரும்
சித்தர் தமிழே பிரணவ சூட்சுமம் விளக்கும்

தமிழே தலைவன் மொழி; சித்தன் மொழி
தமிழை அறிந்தால் சித்தனை அறியலாம்
தமிழை அறிந்தால் தலைவனை அறியலாம்
தமிழை அறிந்தால் உலகை அறியலாம்
தமிழை அறிந்தால் இயற்கையை அறியலாம்

தமிழை அறிந்தால் உன்னை அறியலாம்
தமிழை அறிந்தால் நீ சவமல்ல; நீயே சிவமென்பதை அறியலாம்

அறிவீர் இதனை இன்றே! செல்வீர் ஓங்காரக்குடில் நன்றே!


ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184










திருவள்ளுவர் Thiruvalluvar
Facebook Page

Facebook Group

2 comments:

  1. "தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும்" -அபிராமிஅந்தாதி

    உண்மைதான். திருவள்ளுவர் தெய்வ வடிவம் பெற்றவர் என்பது பொருட்குற்றமற்றது.

    ஈழத்து சிவாலயங்கள் பற்றிய தொகுப்பை பிரசுரித்தமைக்கு நன்றிகள். அருமையான வலைப்பூ ஒன்றையும் அதன்மூலம் அறியக்கூடியதாக இருந்தது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிகுந்த மகிழ்ச்சி நண்பரே

    \\வள்ளுவப்பெருமான் கடவுள் என்று அறிந்து வள்ளுவப்பெருமானே எனக்கு அருள் செய்யவேண்டுமென்று திருவடி பணிந்து அழைத்தால் அஞ்சேல் மகனே! என்று அருள்செய்யக் கூடிய வல்லமை அய்யன் வள்ளுவருக்குண்டு.\\

    முழுமையாக உடன்படுகிறேன் நண்பரே

    தொடர்ந்து எழுதுங்கள்..
    வாழ்த்துகள்

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.