ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்

இவ்வாலயம் யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் அமைந்துள்ளது.

நகுலேஸ்வரம் 2010
கீரிமலை நகுலேஸ்வர ஆலய மஹா சிவராத்திரி உற்சவம் 13.03.2010
வரலாற்றுப் பின்னணி

சோழ இளவரசியாகிய மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து அவஸ்தைப் பட்டாள். சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்ட மாருதப்புரவீகவல்லி கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்ததின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டாள். கீரிமலைப் புனித்தத் தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயுந்தீர்ந்து குதிரைமுகமும் மாறியது.
போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட ஆலயம்

போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1561 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசியர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது.
திருத்தி அமைக்கப்பட்ட நகுலேஸ்வரம் ஆலயம்
திருப்பணிவேலைகள் நிறைவேறி 1895ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனிமாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
Naguleswaram Temple, Jaffna part 1 2009
மிக நல்ல பதிவு இராணுவம் பொலிஸ் இவர்களை தவிர்த்து இருக்கலாம் இனிவரும் பதிவுகளில் இதை கவனியுங்கள் நன்றி
ReplyDeleteமிக நல்ல பதிவு இராணுவம் பொலிஸ் இவர்களை தவிர்த்து இருக்கலாம் இனிவரும் பதிவுகளில் இதை கவனியுங்கள் நன்றி
ReplyDelete