வற்றாப்பளையில் அதிசயம்! அதிகாரியை பாம்பு கலைத்தது! தொடர்ச்சியான சலங்கை ஒலிகள்!! கிலி கொண்ட படை.
முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேறெந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் குடியமர்த்தப்படாத நிலையில், வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றம் தொடர்பில் சிங்கள அரசும் படைகளும் கூடிய கவனம் செலுத்தியமை குறித்து நம்பமுடியாத தகவல்கள் இலங்கைப் படையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவந்துள்ளதாவது:-
அப்பகுதிக்கு மீளக்குடியமரச் சென்ற மக்களது ஓலைகளால் ஆன வீடுகள் அனைத்தும் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வீடுகள் ஏன் எரிக்கப்பட்டன? என அப்பகுதி மக்கள் இலங்கைப் படையினரைக் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த படையினர், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் சலங்கை ஒலிகள் தொடர்ந்து கேட்டுவந்ததாலேயே தாம் வீடுகளுக்கு நெருப்பு வைத்தாகத் தெரிவித்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் தீ மூட்டிய போதிலும் ஓலை வீடுகள் மட்டுமே எரிந்தழிந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இதேவேளை தமது படைத்துறை அதிகாரி ஒருவர் வற்றாப்பளை அம்மன் ஆலயப் பகுதிக்குச் சென்ற போது அவரை வெள்ளை நாக பாம்பு ஒன்று கலைத்ததாகவும், அதில் இருந்து அவர் ஓடித்தப்பிச் சென்றதாகவும், அதேபோன்று ஆலய வளாகத்தில் வைத்து படையினரை ஆறு தடைவைகள் பாம்புகள் கலைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளை அடுத்து அந்தப் பகுதிக்குப் பொறுப்பான இலங்கைப் படை அதிகாரி அந்தப் பகுதி பிரதேச செயலர் ஊடாக வற்றாப்பளை அம்மன் ஆலய பூசாரியார் மற்றும் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு ஆலயத்தினை பராமரிப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கைக்கு முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் முகாம்களிலும் முகாம்களில் இருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்துவந்த மக்கள் வற்றாப்பளைக் கிராமத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.
மக்கள் குடியமர்த்தப்பட்டதன் பின்னர் வற்றாப்பளை கிராம எல்லைக்குள் எந்த ஒரு படைமுகாமையும் வைத்திருப்பதை இலங்கைப் படையினர் தவிர்த்துள்ளதுடன், அந்தக் கிராமத்தில் மாட்டிறைச்சி அழிப்பதற்கும் தடைவிதித்துள்ளனர்.
இதனைவிடவும் கள்ளு உற்பத்திக்கும் அந்தக் கிராமத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வற்றாப்பளை தவிர்ந்த அதன் அயற்கிராமங்கள் எவற்றிலும் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வற்றாப்பளை அம்மனின் அருளால் மேலைத்தேயர்கள் ஆலயத்தில் இருந்து நந்திக்கடல் ஊடாக தலை தெறிக்க ஓடியதாக ஆலய வரலாறுகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வைகாசி மாதம் நடைபெறவேண்டிய பொங்கல் நிகழ்வு போர் ஆக்கிரமிப்புக் காரணமாக நடைபெற்றிருக்கவில்லை.
இந் நிலையில் இன்று திங்கட்கிழமை ஆலயத்தில் 'வளந்து நேர்தல்' எனப்படும் நிகழ்வு நடைபெறுகின்றது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாகவே வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாகர்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பூர்வீக நாகதம்பிரான் ஆலயப்பகுதியில் முகாம் அமைத்துள்ள இலங்கை இராணுவத்தினரும் இதே அனுபவங்களை சந்திக்க நோ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கழுவிக் காயவிட்டிருந்த சீருடை பைகளுக்குள் பாம்புகள் போய் இருந்து அவர்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், அதன் காரணமாகவே அங்கிருந்த இராணுவத்தினர் உடனடியாக அப்பகுதி உதவி அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு ஆலயத்தை திறந்து பூஜை, வழிபாடுகள் நடைபெற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பணித்ததாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது ஆலயம் திறந்து பூஜைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. எனினும் அப்பகுதி மக்களை மீளக்குடியமர இன்னமும் இலங்கை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
அத்துடன் அக்கிராமத்தில் இருந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தினரால் உடைத்து தரைமட்டமாக்கியுள்ளதாகவும், பலரின் வீடுகள் இருந்த அடையாளங்களே இல்லாத அளவுக்கு கற்கள், ஓடுகள் மற்றும் மரங்கள் ஆகிய அனைத்துப் பொருட்களையும் இராணுவத்தினர் ஏற்றி வேறு இடங்களுக்கு கொண்டுசென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி!
TamilWin
http://www.tamilwin.com/view.php?2a0q89ZF22e31Dpiac0ecbqojZ42cdePZLukbcd2cSIPJd4b4dHVQ6o0b43iQG1Red0e43F2g830
Subscribe to:
Post Comments (Atom)
//அனைத்து வீடுகளுக்கும் தீ மூட்டிய போதிலும் ஓலை வீடுகள் மட்டுமே எரிந்தழிந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். //
ReplyDeleteஇதில் என்ன? புதுமை. வற்றாப்பளை, நாகதம்பிரான் கோவிலைகளை அண்டிய இடத்தை மட்டும் காப்பாற்றும், தெய்வம் ஏனைய பகுதிகளைக் கைவிட்டு
விட்டதா?
வெள்ளை நாகம் கலைத்ததா? இது நித்தியானந்தாவை விட மோசமான மோசடி?
ஏதோ நடத்துங்க?
போய் பிள்ளைகள் படிக்குரங்கலன்னு பாருங்க..
ReplyDelete