Friday, 12 March 2010

சுவாமி நித்தியானந்தா: நெற்றிக்கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே

பெருகும் (ஆ)சாமியார்கள்: நெற்றிக்கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே


ஆத்மீகத்தின் பெயரில் (ஆ)சாமிகள் வளர்வதைத் தடுப்போம்.

-----------------------------------------------------------------

சுமார்த்த அத்வைதம் பெருக கல்கிசாயிநித்தியானந்தா என்று பெருகும் சாமியார்கள்

கி. பிரதாபன்

கல்கிபகவான் என்று பெயர்பூண்டு கடவுளாக பிரபல்யமாகியுள்ளார்.இவருக்கு ஆந்திர மாநிலந்தொட்டு கொழும்பு-யாழ்ப்பாணம் என்று பெரு வரவேற்பு!

இன்று இவரது ஆச்சிரமத்தின் ஒருபகுதியான வரதபாளையத்தில் உள்ள தொழில்நுட்பப் பகுதியை அங்குள்ள மக்கள் அடித்து நொருக்குமளவுக்கு அங்குள்ள மக்களுக்கு அசுரனாகியுள்ளார். ஏனைய வெளியூர்காரருக்கு தேவாதி தேவன்!

வரதராஜுலுவு-வைதர்பி எனும் தம்பதியரின் மஞ்சப் போரில் இவர்களின் விந்துவும் முட்டையும்(சூல்) இணைவினால் உருவானவரே கல்கி என்று அழைக்கப்படும் விஜயநாயுடு.அதுபோல் வெங்கய்யா - பென்சலம்மா தம்பதியரின் மஞ்சத்து மோகத்தில்.....................

கல்கியைவிட சாயிபாபாவுக்கு பக்தர்களும் "மவுசும்" அதிகம் எனலாம். சாயி பாபாவைப் பற்றி புகார்களை பிரித்தானிய வானொலி சேவையகம்- பிபிசி வெளியிட்டிருந்தமையும் டில்லி அமெரிக்க தூதரகம் தனது நாட்டவர்களுக்கு இவர்பற்றி அவதானமாக இருக்கும்படி எச்சரித்திருந்ததும் இவர்பற்றிய ஐயத்தை ஊட்டியுள்ளது ஒருப்பக்கம் இருக்கட்டும்.

திருநீறையும் தங்க நகைகளையும் கையைச் சுழற்றி வித்தைக்காட்டி வரவைப்பவர் ஏன் பெரிய பெரிய பொருட்களை வரவைப்பதில்லை?..............................

"பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்" (25)

பிறப்பிலி இறப்பிலி என்று சிவனைப் போற்றியிருக்க;

இந்த நித்தியானந்தா யார்? சுமார்த்த அத்வைதத்தை இந்துமதம் என்று போதிக்க சுமார்த்த சங்கராச்சாரியார்களின் ஊடகங்களால் வளர்க்கப்பட்ட ஆசாமி!!!! இன்று கையும் களவுமாகப் பிடிபட்டுப் போனார்.

"நரர்பயில் தேயம் தன்னில்
நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழித்து தோன்றல்
மிக்கபுண்ணியம் தானாகும்
தரையினில் கீழை விட்டுத்
தவம் செய்சாதியினில் வந்து
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே"
- சிவஞான சித்தியார்
பரசம யங்கள் செல்லாப்
பாக்கியம் பண் ஒணாதே"
- சிவஞான சித்தியார்

சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல் அரிது
-சிவஞான சித்தியார்

பதிவை முழுமையாகப் படிப்பதற்கு
www.sivathamiloan.blogspot.com

சுவாமி நித்தியானந்தா சிவமா? சவமா?

சூர்யா

மனிதர்கள் அனைவரும் இறையுடன் இரண்டறக் கலக்கலாம். மனிதப் பிறப்பின் அதியுன்னத ஆன்மலாபமும் அதுவே.

ஆத்மாக்கலெல்லாம் சிவத்தின் கூறு. எல்லா மனிதரும் அவர்களுள் சிவத்தைக் காணமுடியும். சவமாகும் முன் சிவமாகலாம் என்பதே சித்தர்கள் கண்ட உண்மை. அதைப் பல சித்தர்கள் பலவிதமாக சொல்லியிருக்கிறார்கள். சித்தநிலைக்கு(சிவநிலை) கிட்டே சென்று ஜம்பொறிகளிடம் தோற்றவரே பலர். இதில் சுவாமி நித்தியானந்தா எதற்குள் அடக்கம் என்பதை யாமறியோம். இந்தச் சாகாக்கல்வி (பிறப்பு, இறப்பை வெல்லும் நிலை - சிவநிலை) இலகுவானது அல்ல. இதற்கே அந்தநிலையை(முற்றுப்பெற்ற)அடைய, முற்றுப்பெற்ற குருவானவரின் உதவி தேவைப்படுகின்றது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"

என்கிறார் மாபெரும் சித்தர், ஆசான் திருவள்ளுவர். சித்தர்கள் அருளிய திருவாக்கு என்றுமே பொய்க்காத பொய்யாமொழி.

மேலும் வாசிக்க
திருக்குறள் தமிழர் வேதம்

http://cyber-mvk.blogspot.com/2009/11/blog-post_1963.html


பற்றற்றான் என்பவன் ஜம்பொறிகளையும் அவற்றால் எழம் தீயகுணங்களையும் வென்றவன், சாகாக்கல்வியில் தேர்ச்சி பெற்றவன், இறையுடன் இரண்டறக் கலந்தவன், பேரின்பமடைந்தவன், சிவநிலையடைந்தவன், சித்தன் எனப்பலபெயர் கொண்டு அழைக்கப்படுகிறான். இறையென்பது பரமாத்மா, எங்கும் பரந்திருப்பது. ஜீவாத்மா வினையின் காரணமாக ஓருடலில் கட்டுண்டு இருப்பது. பரமாத்மாவை சமுத்திரத்திரத்திற்கு ஒப்பிட்டால் ஜீவாத்மா ஒரு துளியாகக் கருதலாம். அந்தத்துளி சமுத்திரத்தினுள் கலக்கும்போது அதற்கு தனியடையலாம் இல்லை. இவ்வாறே ஜீவாத்மாவும் சிவநிலையடையும் போது வெவ்வேறு பெயர் கொண்டாலும் ஓரே பரமாத்மநிலையை(சிவநிலை) அடைந்ததனால் வேற்றுமை கிடையாது.

இந்த நிலையைடைந்தவர்கள் அவதாரம் எடுக்கும்போது பலபெயர் கொண்டழைத்தாலும் அவர் நிலையையும் குணமும் ஒன்றே. யாரை வழிபட்டாலும் எல்லோரும் ஒருமுகமாக அருள்பாலிப்பர். மதத்தின் பெயரில் மானிடர் மோதிக்கொள்வர், அவதார புருஸர்கள் மோதுவதில்லை. அவர்கள் அன்பையும் அமைதியையும் இறையின்பத்தை அடையும் வழியைக் காட்டுவது அன்றி வேறெதிலும் நாட்டமற்றிருப்பர். இவற்றைச் செய்யத்தவறியோர் முற்றுப்பெற்ற, பற்றற்ற ஞானியல்ல என்றமுடிவுக்கு வரலாம்.

உடம்மைப் பெற்றதன் பயன் உத்தமமாகிய இறையை எம்முள்ளே காண்பதற்கே.

உடம்பைப் பெற்ற பயன்
-ஆசான் ஒளவையார்-

உடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்"

உடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.

இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.

நல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.

நமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்

ஈசனைக் காட்டும் உடம்பு"

என்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.

"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே

உள் அகத்து ஈசன் ஒளி"

மனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.
அது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,

""பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே

நூலின் கண் ஈசன் நுழைந்து"

பாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.

மற்றுமொரு உதாரணம்

"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்

ஈசன் நிலை துதி செய்து கூறினால்"

ஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்
எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.

ஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.

"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்அனைத்துயிர்க்கும் தாளும் அவன்"

ஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.

இரண்டாம் குறள்

யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.

இதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.


"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்

மாறில் தோன்றும் பிறப்பு''

பரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.


வாழும் உதாரணம்:

குருநாதர் தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் ஆங்கில ஆண்டு 13.01.1936 தமிழ் வருடம் யுவ ஆண்டு தமிழ் மாதம் மார்கழி 29-ம் நாள் திங்கட்கிழமை அன்று இரவு 8.30 மணியளவில் (முன்இரவு 36ம் நாழிகைக்கு) தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் துறையூரில் மிகவும் ஏழ்மையான உயர் சாதியற்ற குடும்பத்தில் தவம் செய்த தம்பதிகளான திரு. பாலகிருஷ்ணன், திருமதி. மீனாட்சி அம்மாள் அவர்களுக்கு தெய்வப்புதல்வனாக அவதரித்தார். குருநாதரின் இயற்பெயர் "ரெங்கராஜன்" ஆகும்.

சிறுவயது முதல் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட குருநாதர் துறையூர் அவல்பட்டறை சந்தில் இருந்த "திரு. சின்னசாமி சாஸ்திரி" அவர்களிடம் ஆன்மீக கல்வியை பயில ஆரம்பித்தார். குருநாதரின் தீரத்தையும் வைராக்கியத்தையும் கண்ட சின்னசாமி சாஸ்திரி ஐயா அவர்கள், குருநாதருக்கு, "ஆசான் சுப்ரமணியரையும், ஆசான் அகத்தீசரையும், மகான் கருவூர் முனிவரையும் பூஜை செய்தால் நாம் சொல்லவொண்ணா வல்லமையுடன், மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று பேரின்ப வாழ்வை அடையலாம்" என்ற பேருபதேசத்தை அருளினார். அதுமுதல் குருநாதர் ஆசான் சுப்ரமணியரையும், ஆசான் அகத்தீசரையும் மகான் கருவூர் முனிவரையும் உண்மை அன்பால் மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தார்கள்.

ஆங்கில ஆண்டு 17-09-1976 தமிழ் வருடம் நளஆண்டு தமிழ்மாதம் புரட்டாசி 1ம் நாள் வெள்ளிக்கிழமை முதல் ஆசான் சுப்ரமணியரின்(ஆதிசிவனின்) அன்புக்கட்டளைப்படி ஆசான் சொல்லை சிரமேற்கொண்டு தன் தவயோக வாழ்க்கையை தொடங்கினார்கள். அதுமுதல் ஆசான் சுப்ரமணியரின் சொல்லை சிரமேற்கொண்டு கடுகளவும் மொழிபிசகாமல் நடக்க ஆரம்பித்தார்கள். அதுமுதல் ஆசான் சுப்ரமணியரின் கட்டளைப்படி(அறுசுவையில்லாமல் உணவில் முற்றிலும் உப்பை நீக்கி) உணவு உட்கொள்ள ஆரம்பித்தார்கள். மேலும் தன் அனைத்து நிகழ்வுகளையும் ஞானிகளின் அருட்கட்டளைப்படியே மேற்கொண்டு தவம் செய்துவந்தார்கள்.

ஆங்கில ஆண்டு 26.04.1979 தமிழ் வருடம் சித்தார்த்தி தமிழ்மாதம் சித்திரை 13ம் நாள் திங்கள்கிழமை அமாவாசை நாளன்று ஆசான் சுப்ரமணியராலும், ஆசான் அகத்தீசராலும் வாசி நடத்தி கொடுக்கப்பட்டு, வாசிப்பயிற்சியை ஆரம்பித்தார்கள். 13.02.1987 முதல் 14.02.1988 வரை மௌனயோகம் மேற்கொண்டார்கள்.

1988ம் டிசம்பர் மாதம் மகான் கருவூரார் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது. குருநாதர் தம்மை நாடிவரும் அன்பர்களுக்கும் தொண்டர்களுக்கும் உண்மை ஆன்மீக நெறியான மரணமில்லா பெருவாழ்வுடன் பேரின்பத்தை தரக்கூடிய உண்மையான சன்மார்க்க நெறியை போதித்தார்கள். திருக்குறள், திருமந்திரம் சிவஞானபோதம் மற்றும் பல ஞானியர்களின் கருத்துகளையும் அவர்கள் தம் நூல்களின் மூலம் கூறிய உண்மை அனுபவத்தையும் உபதேசித்தார்கள். "மனிதனும் கடவுளாகலாம்" என்ற பேருண்மையையும் அதற்கான வழிமுறைகளையும் உபதேசித்தார்கள்.

மேலும் அறிய கீழ் சுடுக்கவும்:

http://www.agathiar.org/tamil/gurunathar.php

-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------

காணொளி: சுவாமி நித்தியானந்தா மனம் திறக்கிறார்.

Interview with Swamiji by eminent researcher - Rajiv Malhotra


Niyananthar Teachings on Maha Shivarathiri


Nithyananda Dhyanapeetam,
Paramahamsa Nithyananda's mission web site
http://www.dhyanapeetam.org/

No comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.