Sunday, 30 May 2010

காணொளி: ஓங்காரக்குடிலும் சதுரகிரியும்

தமிழ் வளர்க்கும் ஓங்காரக்குடிலும் சித்தர்கள் வாழும் சதுரகிரியும்
ஆக்கம்: கண்ணன்(சூர்யா)

ஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி!
ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் ஓங்காரக் குடிலாசன் திருவடிகள் போற்றி! போற்றி!


சதுரகிரி உலக அதிசயங்களே அதிசயக்கக்கூடிய அதிசயம். எங்கு திரும்பினாலும் அதிசயம். இங்குள்ள மரங்கள், வாழும் உயிரினங்கள், மூலிகைச்செடிகள் யாவும் அதிசயம். சித்தர்களின் ஆசியில்லாமல் இலகுவாகப் போக முடியாது என இங்குள்ள மலைவாசிகள் கூறுகிறார்கள்.

நான்கு பக்கமும் நன்னான்காக 16 மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள் வாழும் புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல். இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

தமிழ் மண்ணிலுள்ள இந்த அதிசயத்தை, மகிமையை தமிழர்கள் பலரும் அறியாமலுள்ளனர். இமையத்துக்கு இணையானதென்று சித்தர்கள் கூறியுள்ளார்கள். நிறையச் சிரமங்கள் மத்தியில் நானும் போய் வந்தேன். என்ன சிரமம் இருந்தாலும் மிகுந்த திருப்தி தரும் பயணம்.

தமிழ் தந்து, தமிழ் இன்றும் வளர்த்துக் கொண்டிருக்கும் முற்றுப்பெற்ற தமிழ்ச்சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள். திருச்சி துறையூர் ஓங்காரக்குடிலுக்கும், சதுரகிரிக்கும் தமிழ்மீதும், தமிழர் வரலாறு மீதும் ஆர்வமுள்ள அன்பர்கள் அனைவரும் செல்வது பலனளிக்கும். ஆன்மீகவாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஓங்காரக்குடிலில் அய்யன் திருவள்ளுவரின் பல நூல்கள் பற்றியறியலாம்.

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)



பகுதி 1 : 7



சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம்.
பகுதி 2 : 7


சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார்.

மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ,அவ்வளவு ஏன், ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது.

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர் சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கென அவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும் இயலாத ஒன்றாகவே உள்ளது.

மனித நேயம் அறிந்த மனிதனே மகான்/சித்தன் ஆகிறான்.பின்னாளில் சிவம்/தெய்வமும் ஆகின்றான்.

பகுதி 3 : 7


வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர், காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே.

பகுதி 4 : 7


வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும். சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு.

பகுதி 5 : 7



தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க சுவாமிகள். மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா." என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும். பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன. நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன.

பகுதி 6 : 7


சன் ரீவி நிஐம் நிகழ்ச்சி பின்னிசை வழங்கி பயமூட்டும் அளவிற்கு பயப்பட ஒன்றுமில்லை.அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்.

பகுதி 7 : 7


ஓங்காரக்குடில்

தமிழையறிய, தமிழ்தந்த தலைவனையறிய ஓங்காரக்குடில் விரைவீர்.
ஆக்கம்: கண்ணன்(சூர்யா)

ஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி!
ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி!
ஓம் ஓங்காரக் குடிலாசன் திருவடிகள் போற்றி! போற்றி!



சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!

சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
சித்தர் தமிழே ஓங்கார விளக்கம் தரும்
சித்தர் தமிழே பிரணவ சூட்சுமம் விளக்கும்

தமிழே தலைவன் மொழி; சித்தன் மொழி
தமிழை அறிந்தால் சித்தனை அறியலாம்
தமிழை அறிந்தால் தலைவனை அறியலாம்
தமிழை அறிந்தால் உலகை அறியலாம்
தமிழை அறிந்தால் இயற்கையை அறியலாம்

தமிழை அறிந்தால் உன்னை அறியலாம்
தமிழை அறிந்தால் நீ சவமல்ல; நீயே சிவமென்பதை அறியலாம்

அறிவீர் இதனை இன்றே! செல்வீர் ஓங்காரக்குடில் நன்றே!


ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184



தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அறிய @
சித்தர்கள் தந்த தமிழ்
http://cyber-mvk.blogspot.com/2010/04/blog-post_15.html

1 comment:

  1. //அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

    1. ஞானவெட்டியான் - 1500
    2. திருக்குறள் - 1330
    3. ரத்தினசிந்தாமணி - 800
    4. பஞ்சரத்தனம் - 500
    5. கற்பம் - 300
    6. நாதாந்த சாரம் - 100
    7. நாதாந்த திறவுகோல - 100
    8. வைத்திய சூத்திரம் - 100
    9. கற்ப குருநூல் - 50
    10. முப்பு சூத்திரம் - 30
    11. வாத சூத்திரம் - 16
    12. முப்புக்குரு - 11
    13. கவுன மணி - 100
    14. ஏணி ஏற்றம் - 100
    15. குருநூல் - 51
    (இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)//

    எந்தப் பார்ப்பனரும் ஒப்புக்கொள்ளமாட்டார்.
    ஏனென்றால் தமிழில் இருக்கும் அனைத்தும் சமசுகிருதத்தில் இருந்து காப்பி அடித்தது என்றே அவர்கள் கூறுவர்.
    நான் சதுரமலைக்குச்(சதுரகிரி அல்ல)சென்றுள்ளேன்.
    சித்தர்களை கண்டுள்ளேன்.

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.