Saturday, 5 June 2010

பிராமணன் தூய்மையானவன்

ஆரியன் யார்? பிராமணன்/அந்தணன் யார்?

கடவுளை அறநெறியில் நின்று இறைவனை அடைந்தவனே அந்தணன்/பிராமணன்/சித்தன் ஆவான். மந்திரங்ளைக் கற்று பூஜை செய்பவர்கள் வெறும் பூசாரியன்றித் தம்மைத் தாமே முற்றுப்பெற்ற பிராமணன் அல்லது அந்தணன் என்று அழைப்பது மகாகுற்றமாகும்.

சாதாரண மானிடர்கள் தங்களை ஆரியர் அல்லது பிராமணர் என்று வகைப்படுத்துவது தவறானது. அதற்கு அவர்கள் அறியாமையே காரணம். அறவழி நின்று முற்றுப்பெற்ற சித்தர்களே(ஞானிகள்) பிராமணர்கள் ஆவார்கள். இவ்வாறு முற்றுப்பெற்ற ஞானிகள்/சித்தர்களே ஆரியர்கள் என்றும் அழைக்கப்படுவர். சாதாரண மனிதர்களை ஆரியர்கள் என்று வகைப்படுத்தல் தவறானது.

யார் பிராமணன் அல்லது அந்தணன் ஆகலாம்?

பெறுதற்கரிய பிறப்பாகிய மானிடப்பிறப்பைப் பெற்ற அனைவருக்கும் தகுதியுண்டு. "கு” ஆகிய இருளை நீக்கி “ரு” ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய முற்றுப்பெற்ற "குரு”வாகிய ஞானிகள்/சித்தர்கள் காட்டும் வழியைக் கடைப்பிடிப்போர் யாவரும் பிராமணன்/அந்தணன் ஆகலாம்; சித்தன்/ஞானி ஆகலாம்; இறைவனை அடையலாம். பிறப்பால் மனிதர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆக முடியாது. மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் சித்தர்களே(masters) இறைதூதர்களாக, மானிடர்களாக இப்புவியில் தோன்றி மானிடத்தை அறநெறியில் யுகந்தோறும் வழி நடத்தினர்; இன்றும் நடத்துகின்றனர்.

மானிடனாகப் பிறந்து பிராமணன்/அந்தணன்/சித்தன்/ஞானி ஆனோர் எவரும் உண்டோ?!

ஆம். கோடான கோடிப்பேருண்டு. பல யுகங்களிலும் மானிடராகப் பிறந்து ஞானியாகியுள்ளனர்.

உ+ம்:

ஆசான் அகத்தீசர்
ஆசான் நந்தீசர்
ஆசான் திருவள்ளுவர்
ஆசான் ஒளவையார்
ஆசான் மஸ்தான்
ஆசான் பீர்முகமது
ஆசான் இயேசுபிரான்
ஆசான் கௌதமர்
ஆசான் பூணைக்கண்ணார்
ஆசான் மாணிக்கவாசகர்
ஆசான் வள்ளலார்
.... போன்ற எண்ணிலா கோடிப்பேர்.


சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!

சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
சித்தர் தமிழே ஓங்கார விளக்கம் தரும்
சித்தர் தமிழே பிரணவ சூட்சுமம் விளக்கும்

தமிழே தலைவன் மொழி; சித்தன் மொழி
தமிழை அறிந்தால் சித்தனை அறியலாம்
தமிழை அறிந்தால் தலைவனை அறியலாம்
தமிழை அறிந்தால் உலகை அறியலாம்
தமிழை அறிந்தால் இயற்கையை அறியலாம்
தமிழை அறிந்தால் தன்னை அறியலாம்

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !

- ஆசான் திருமூலர்-


அறிவீர் இதனை இன்றே! செல்வீர் ஓங்காரக்குடில் நன்றே!



ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184

No comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.