தடுங்கோள் மனத்தை! விடுங்கோள் வெகுளியை! தானம் என்றும்
இடுங்கோள்! இருந்தபடி இருங்கோள்! எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்
விடுங்கோன் அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!
மனத்தை அடக்குங்கள்! கோபத்தை விடுங்கள்! தானத்தை இடுங்கள்! இருந்தபடி அமைதியாக இருங்கள்! இப்படி இருந்தால் ஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே! அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்!
விரிவான பொருள்:
தடுங்கோள் மனத்தை : மனசைத் தடுக்கணும்! தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்!
விடுங்கோள் வெகுளியை : வீண் கோபத்தை விடணும்! உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்!
தானம் என்றும் இடுங்கோள் : பசித்தோற்கு பசியாற்றுதலே சிறந்த தானம் ஆகும்.
இருந்தபடி இருங்கோள் : முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே! முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு! முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்!
இப்படி இருந்தால்....
எழு பாரும் உய்ய : ஏழ் உலகும் உய்ய
கொடும் கோபச் சூருடன் : கோபச் சூரனையும்
குன்றம் திறக்க : அவன் தம்பி தாருகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே! அவனையும் தொளைக்க : அவர்களைத் துளைக்க
வை வேல் விடுங்கோன் : கூர் வேலை விட்டவன், முருகன்!
அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும் : அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்! இருந்தபடி இருங்கோள்! அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!
இருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய்! முருகா! முருகா!
மலை மிசை மேவும் பெருமாளே! என் மனம் மிசை மேவும் பெருமாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.